கீழக்கரை அருகே வழிபறியில் ஈடுபட்டு நகைபறித்த 3பேர் கைது

      


இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், சிக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17.09.2026 அன்று இரவு காரில் செல்பவர்களை வழிமறித்து, ஆயுதங்களை காட்டி நகைகளைப் பறித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த செப்டம்பர் 17 இரவு வேளையில் காரில் சென்று கொண்டிருந்த நபர்களை, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் வாள், அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சிக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில், கீழக்கரை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் யுவபிரியாவின் நேரடி மேற்பார்வையில், கீழக்கரை உட்கோட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலிஸார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்:

 கருப்பசாமி (24), ம.கரிசல்குளம், ராஜமாணிக்கம் (27), பறையங்குளம், குணசேகரன் (19), காணிக்கூர்,கைது செய்யப்பட்டவர் களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன. மேலும், இந்த குற்றச் சம்பவத்திற்கு  பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களும் போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.?கைது செய்யப்பட்ட கருப்பசாமி, ராஜமாணிக்கம் மற்றும் குணசேகரன் ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments