கும்மிடிப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றம்.... வியாபாரிகளுக்கு அதிர்ச்சி.... வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி



திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக 250.க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது.இந்த சாலை ஓர கடைகளால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இதனால் பேருந்துகள் நகருக்குள் வராமல் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்று விடுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், பயணிகளும் பெருத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.



இந்நிலையில், உதவி கோட்ட பொறியாளர் எம்.கே.சரவணன்,உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இந்நிலையில்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையோர வியாபாரிகள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மாற்று இடம் வழங்கும் வரை கடைகளை அகற்றும் நடவடிக்கையை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



வியாபாரிகளின் இந்த கோரிக்கையை பொறுட்படுத்தாமல் அதிகாரிகள் அதிரடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த சாலையோர வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெரிய வணிக நிறுவன கட்டிடங்களை அகற்றாமல் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் அகற்றும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு சாலையோர வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி இதை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Post a Comment

0 Comments