திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் முயற்சியால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டன.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு ரூ.6 லட்சத்திற்கும் மேல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுமியின் குடும்பத்தினர் சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து, திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி மற்றும் நிர்வாகிகள் மதுரையில் உள்ள கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, அரசு மருத்துவமனையில் துரிதமாக சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சை முடிந்து சிறுமி தற்சமயம் தனது இல்லம் திரும்பிய நிலையில், பட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.எஸ். சரவணன் சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, மருத்துவம் மற்றும் பயணச் செலவுகளுக்காக நிதியுதவி வழங்கினார். மேலும், எதிர்கால மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.
சிறுமியின் குடும்பத்தார்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும் கழக நிர்வாகிகளுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

0 Comments