ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே அபிராமம் பகுதியில் உள்ள நத்தம் ஊராட்சியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன . இதில் மருது பாண்டியர் நகர் பகுதியில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் அடிப்படை வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் . இப்பகுதியில் உள்ள தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தெருக்களில் தேங்கி கொடிய நோய்களை பரப்பும்கொசுக்களின் பிறப்பிடமாக உள்ளது.
குடியிருப்பு பகுதியில் இந்த மழைநீர் தேங்கி வெளியேறமுடியாமல் கழிவுநீராக மாறி துர்நாற்றம் அடித்து வருகிறது . பொதுமக்கள் நடக்க முடியாத அளவிற்கு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் . மேலும் தமிழகத்தின் பல்வேறு டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், இப்பகுதி மக்கள் மிகவும் டெங்கு காய்ச்சல் பீதியில் உள்ளனர்.
மேலும் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் தெருகளில் விளையாடும் போது, நோய் தொற்று வெகுவாக பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments