கீழக்கரையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் நான்காம் நாள்  செவ்வாய்க்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி முள்ளுவாடியில்  நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பேரணியாகச் சென்று, டெங்கு பரவும் முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.        இதன் மூலம் பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இப்பேரணியில் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் பேரணியை ஒருக்கிணைப்பு செய்தார் .

Post a Comment

0 Comments