ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இரு தரப்பு இளைஞர்கள் மோதலை தடுத்த பெண் தலைமை காவலரை தள்ளிவிட்டதில் மரணம் அடைந்தால் அவருக்கு அரசு வழங்க வேண்டிய நிதி அறிவிக்கப்படாததால் ,உடலை வாங்க மறுத்த உறவினர்கள். எஸ்பி பேச்சுவார்த்தைக்கு பின்பு உடலை வாங்கிச் சென்றனர் .
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் தலைமை பெண் காவலர் கண்ணகி (35). நேற்றுமுன்தினம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பரமக்குடியில் பணி ஒதுக்கப்பட்டு பணியில் இருந்த பொழுது, மருத்துவமனைக்குள் 2 தரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்டனர்.அதனை பார்த்த காவலர் கண்ணகி மோதலை தடுத்துள்ளார் . அப்பொழுது இளைஞர் ஒருவர் கண்ணகியை தள்ளிவிட்டு ஓடியுள்ளார் .இதில் கீழே விழுந்த பெண் காவலர்கண்ணகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முன்தினம் இரவு 7 மணிக்கு உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகள் மூலம் குமாரக்குறிச்சியை சேர்ந்த கருப்புராஜா என்பவரை கைது செய்துள்ளனர் நேற்று காலை பெண் காவலரின் உறவினர்கள் தமிழக அரசு பணியில் இருக்கும் அரசு ஊழியர் மரணம்அடைந்தால்,ஒரு கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது இது குறித்து இதுவரைக்கும் தமிழக அரசு எதும் அறிவிக்கப்படாததால் கண்ணகியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அமர்ந்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம், கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் தமிழகஅரசு , பாதுகாப்பு பணியில் உயிரிழந்த தலைமை பெண் காவலருக்கு ஒரு கோடி நிவாரண நிதி அறிவிக்கப்படாததை கண்டித்து பதாகைகளை ஏந்தி தர்ணாவில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் கண்ணகியின் உடலை பெற்று சென்றனர்.

0 Comments