தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் தேனி மாவட்ட அமைப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் தேனி ஹோட்டல் ரம்யாஸில் சிறப்புற நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளை வழிநடத்த புதிய மாவட்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம் மாவட்டத் தலைவர்: சீரதவேல் மாவட்டச் செயலாளர்: E. பிரபு மாவட்டப் பொருளாளர்: . S. நல்லசிவம் மாவட்டத் துணைத் தலைவர்: . செல்லபாண்டியன் மாவட்ட இணைச் செயலாளர்: . K. திருப்பதி மாநில செயற்குழு உறுப்பினர்: பிரவேந்திரன் மாவட்ட ஆட்சியருடன் மரியாதை நிமித்த சந்திப்பு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட நிர்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மரு, இரா. வைத்திநாதன், நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இச்சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியருக்கு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி, பயனுள்ள புத்தகங்களை பரிசாக வழங்கி தங்கள் மரியாதையைத் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியரும் புதிய நிர்வாகிகளுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

0 Comments