பெரம்பலூர்: தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பு நிகழ்ச்சி 29.09.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ரோவர் கல்விக் குழுமத்தின் மேலாண்மைத் தலைவர் முனைவர் வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். ரோவர் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவர் திரு. ஜான் அசோக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் திரு. வெங்கடேசன், சீனியர் வருவாய் ஆய்வாளர், வேப்பந்தட்டை மற்றும் திரு. தமிழ்ப்பிரியன், வேளாண்மை அலுவலர், விருத்தாசலம் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் வளர்ப்பு, எதிர்கால இலக்கு மற்றும் பொறுப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் மற்றும் இயக்குநர் முனைவர் வஹாப் ஆகியோர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், ஒழுக்கம், நேர்மை, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புடன் செயல்படுவதற்கும் தேவையான அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று, மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி பரமேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் நிர்வாக அலுவலர் திரு. ஜெயசீலன் மற்றும் அலுவலக மேலாளர் திரு. திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர்.








0 Comments