மீஞ்சூர் ஒன்றியம் மெதூர் ,கோட்டைகுப்பம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது



காந்தி ஜெயந்தியை  தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது மெதூர் ஊராட்சியில்  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்  ஊராட்சி செயலர் தரணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள்  மற்றும் சொத்து வரி செலுத்துதல், குடிநீர்,சாலை வசதி தெருவிளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



 இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வழக்கறிஞர் ஜெயகாந்தன் கோபி உள்ளிட்ட  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோட்டைகுப்பம் ஊராட்சியில்  ஊராட்சி செயலார் குமார் தலைமையிலும் பற்றாளர் தமிழரசி முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் குறைகளை எடுத்துக் கூறினர் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதேபோல் காட்டூர் ஊராட்சியில் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன் ஊராட்சி செயலர் ஜெயமாலா உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர் தொடர்ந்து பழவேற்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலர் நவமணி வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து  பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கையை 20 நாட்களுக்குள் தீர்க்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் பற்றாளர் பானு உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

 திருப்பாலைவனம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது ஊராட்சி செயலார் சௌந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு இதேபோன்று ஏ.ரெட்டிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பற்றாளர் லிங்கேஸ்வரி கலந்து கொண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர் மேலும் கம்மார்பாளையம் ஊராட்சியில் குடிதண்ணீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் அதனை காலதாமதம் ஏற்படுத்தாமல் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என ஊராட்சி செயலர் சசி முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் வஞ்சிவாக்கம் ஊராட்சியில் குடிதண்ணீர் உவர்ப்பு ஏற்பட்ட நிலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் அதனை விரைந்து செயல்படுத்த  தீர்மானம் ஊராட்சி செயலர் நவமணி முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது .

Post a Comment

0 Comments