மயிலாடுதுறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையின் மாவட்டச் செயலாளராகப் பொன்னுதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் வளர்ச்சிக்காகவும்,இளைஞர்களை ஒருங்கிணைத்து சமூகநீதிப் பணிகளைச் சுறுசுறுப்பாக முன்னெடுப்பதற்காகவும் இப்பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமக்கு இந்த முக்கியப் பொறுப்பினை வழங்கி சிறப்பித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 'எழுச்சித்தமிழர்'முனைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்குப் பொன்னுதுரை தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பொன்னுதுரை அவர்களுக்குக் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் தோழர்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0 Comments