மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு ஆதரவாக மீஞ்சூர் பேரூர் கழக சார்பில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு



திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில், மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, மீஞ்சூர் பேரூர் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள, கோழியாளம் ஊராட்சி, வாக்குச்சாவடி எண்.45 சேர்ந்த பகுதியில், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் .க.சு.தமிழ் உதயன் தலைமையில், வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.



இந்த பரப்புரையில் தலைமை கழக வழக்கறிஞர் திரு.A.K.சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் திரு.சுப்பிரமணி, 3வது வார்டு கிளை செயலாளர் திரு.முப்புராஜ், நிர்வாகிகள் திரு.துரை, திரு.டில்லி மற்றும் கோழியாளம் ஊராட்சி தலைவர் திரு.ஜெய் பிரகாஷ், கிளை செயலாளர் திரு.சிவகுமார், கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.



Post a Comment

0 Comments