ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் டைகர் நாட்டியப்பள்ளி சார்பில் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு டைகர் பவுண்டேஷன் நிறுவனர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.
விழா தொடக்கமாக கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சலங்கை பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நிகழ்த்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
விழாவில் ஸ்ரீ ஈஸ்வசேஸ்த்ரா கல்சுரல் அகடமி, மதுரை நிறுவனரும், நாட்டிய கலைமணி, சதிர் மாமணி டாக்டர் அங்காளேஸ்வரி, குரு வி. சண்மதி கிருஷ்ணா, நிருத்திய கலாமணி, பி.ஏ. (பரதநாட்டியம்) ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னாள் தலைமை ஆசிரியரும் நல்லாசிரியருமான காதர் முகைதீன், காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், இளஞ்செம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பாராட்டினர். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழா ஏற்பாடுகளை தொகுப்பாளர் ஆசிரியர் சு. சோலைராஜா செய்திருந்தார். பூஜை நிகழ்ச்சியில் பூசாரி செந்தில் முருகன் லிங்கேஸ்வரன் பங்கேற்றார்.

0 Comments