பெரம்பலூர்: வாலிகண்டபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் வேளாண்மை பயிற்சி



பெரம்பலூர்: தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் வாலிகண்டபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 01.10.2026 அன்று ஒரு நாள் வேளாண்மை பயிற்சி மற்றும் செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.



இப்பயிற்சியில் மாணவர்களுக்கு நவீன வேளாண்மை தொழில்நுட்பங்கள், நிலையான வேளாண்மை, இயற்கை வேளாண்மை முறைகள், பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள், வேளாண்மையில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.



தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு வேளாண் செயல்விளக்கத் திடல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயிர் சாகுபடி, தோட்டக்கலைப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி செய்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.



மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான தங்களது சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே வேளாண்மை குறித்த ஆர்வத்தையும், வேளாண் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவையும் மேம்படுத்தும் வகையில் அமைந்தது.



இந்நிகழ்ச்சியை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் திரு. ராமதாஸ் (தோட்டக்கலைத் துறை), திருமதி  பரமேஸ்வரி (மண்ணியல் துறை), முனைவர் அக்லினோ நவீன் (சுற்றுச்சூழல் துறை) மற்றும் முனைவர்  மணிகண்டன் (பூச்சியியல் துறை) ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.





Post a Comment

0 Comments