முதுகுளத்தூர்: கிராம சபை கூட்டத்தில் திட்டப் பணி முறைகேடு நடந்துள்ளதாக கேள்வி கேட்டவுடன் கூட்டம் முடிந்தது



இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அக்டோபர்.02 அன்று  கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் இராமநாதபுரம்   மாநிலத் திட்டம் துணை இயக்குனர் வேளாண் துறையில் அரசு வழங்கும் சலுகை குறித்தும், விவசாய பணிகளில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்தும் துவக்க உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கிராமசபை கூட்டத்தில் திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் சராமரி  கேள்வி எழுப்பியுடன் கிராமச் செயலர் உடனே கூட்டத்தை விட்டு வெளியேறி அங்கிருந்த பொது மக்களிடம்  தாளில் கையொப்பம் பெற்றுக்கொண்டு உடனடியாக கூட்டத்தை நிறைவு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

0 Comments