ஆவுடையார்கோயில் அருகே அரசு கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது



ஆவுடையார்கோயில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-1&2,  இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியவை, பொன்பேத்தி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சரளா அவர்கள் தலைமை தாங்கினார்.



கல்லூரி  நிருவாகவியல் துறைத்தலைவர் முனைவர் மு. அன்பழகன், தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கா. காளிதாஸ், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் கு.சீனிவாசன், கல்லூரிக் கண்காணிப்பாளர் பா. மகாராஜன்,பொன்பேத்தி மருத்துவ அலுவலர் மேஜர் டாக்டர் கலைவாணன், டாக்டர் .செல்வகுமரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  மா.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 



அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.ஹேமலதா முகாமைத்தொடங்கி வைத்தார். முகாமில் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் உள்ளிட்ட 30 பேர் இரத்த தானம் செய்து, 30 யூனிட் இரத்தம் அறந்தாங்கி இரத்த வங்கிக்கு எடுத்துச்செல்லப்பெற்றது.

இரத்த தானம் செய்த அனைவருக்கும் அரசு இரத்த வங்கியின் சார்பில் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.

பொன்பேத்தி வட்டார சுகாதார ஆய்வாளர்கள் பி..வீரக்குமார்,ஆர்.விக்னேஷ்,கே.கிரிதரன்,மருந்தாளுநர் எஸ்.சுவாமிநாதன், கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் எஸ்.கார்த்திக், து.சிற்றரசு, தி.சிவராஜன், அரசு இரத்த வங்கி செவிலியர்கள்,கல்லூரி  அலுவலகப்பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 


நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ச.ரமேஷ், மு.பழனித்துரை, இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.கணேஷ்குமார், செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா. பாலமுருகன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வ மாணவ, மாணவியர் முகாமை ஒருங்கிணைத்திருந்தனர்.

Post a Comment

0 Comments