பொன்னேரி: இன்டர்நேஷனல் கை மல்யுத்தம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி



திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கான கை மல்யுத்த விளையாட்டு வீரர்கள் கவிதா,நிக்கில் ஆகியோர் தாங்கள் கை மல்யுத்த போட்டியில் பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்று தற்போது டெல்லியில் நடக்கும் இன்டர்நேஷனல் கை மல்யுத்த போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் இதற்கு அங்கு செல்லக்கூடிய செலவினங்களுக்கு பணம் இல்லை எனவும் கூறி உதவி கேட்டனர். 

அதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் இருவருக்கும் போக்குவரத்து செலவிற்காக தலா பத்தாயிரம் ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாயினை அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஆனந்தி,பொதுச்செயலாளர் வசந்தகுமார் ஆகியோர் தங்களது அலுவலகத்திற்கு அழைத்து வழங்கினர். உதவி தொகையினை பெற்றுக் கொண்ட இருவரும் அன்னை வசந்தம் அறக்கட்டளைக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments