கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு. ஸ்டாலின் அவர்கள் (முன்னாள் SP), தனது பதவிக் காலத்தில் மிகச் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றியவர். சாதி, மத வேறுபாடின்றி மக்கள் நலன் சார்ந்தும், சட்ட ஒழுங்கை சீராகப் பராமரிப்பதிலும் அவர் ஆற்றிய பங்களிப்பு மாவட்ட மக்களிடையே பெரும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றது.அவரது ஆட்சிக் காலத்தில் குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறைந்து, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் அமைதியை உறுதி செய்யவும் திரு. ஸ்டாலின் அவர்கள் போன்ற நேர்மையான அதிகாரி மீண்டும் எங்களது மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்பது அவசியமாகிறது.எனவே, பொதுமக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, முன்னாள் எஸ்பி திரு. ஸ்டாலின் அவர்களை மீண்டும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

0 Comments