கீழக்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சாதிக் அகமது என்பவர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்த சாதிக் அகமதுவை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி 2 கிலோ கஞ்சாவுடன் போலீசார் கைது செய்தனர். பின்னர் வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மா. சிவகுரு பிரபாகரன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமநாதபுரம் சிறையில் இருந்த சாதிக் அகமது, போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

0 Comments