புரோட்டா போட்ட செஞ்சி மஸ்தான், பைக்கில் போன தங்கம் தென்னரசு - ஹெல்மெட் போட சொல்லுங்கனு கலாய்க்கும் நெட்டிசன்கள்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் உணவகத்தில் புரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெறுகின்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் திமுக அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் வீதி வீதியாக சென்று, வீடுகள், கடைகள் தோறும் சென்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சியினருடன் சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், அப்பகுதியில் இருந்த உணவகம் ஒன்றுக்கு சென்று புரோட்டா போட்டு கொடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் வாக்கு சேகரித்தார். அவர் வேட்பாளர்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் தொண்டருடன் சென்று வாக்கு சேகரிப்பில் உற்சாகமாக ஈடுபட்டார். இதுகுறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் குறித்து நெட்டிசன்கள் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர். மேலும் அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரை தலைக்கவசம் அணிய சொல்லுங்கள் என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போராட்டத்தைக் கடந்து இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment