மணமேல்குடி அருகே அரசுப்பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் - MAKKAL NERAM

Breaking

Thursday, February 9, 2023

மணமேல்குடி அருகே அரசுப்பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மணலூர் ஊராட்சிக்குட்பட்ட கீரனூர் கிராமத்தில் அரசுப்பேருந்தை  சிறை பிடித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அறந்தாங்கியிலிருந்து மணமேல்குடி வரை தினசரி காலை  6 மற்றும் 7:30 மணிக்கு இயக்கப்படும் 19ம் நம்பர் டவுன்பஸ் மூன்று மாதத்திற்கு மேல் காலை நேரத்தில் இயக்கப் படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் கூலி வேலை மற்றும் மருத்துவமனைக்கு  செல்லக்கூடிய பெண்கள் முதியோர்கள்  மிகவும் சிரமப்படுவதாகவும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பணிமனை நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த  அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி காவல் ஆய்வாளர் குணசேகர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்து தினசரி காலை நேரத்தில் இயக்க  உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில போராட்டம் கைவிடப்பட்டது சாலை மறியல் போராட்டத்தில் அப்போதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment