அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கைப்புறா மாட்டுப் பந்தயம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, February 5, 2023

அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு கைப்புறா மாட்டுப் பந்தயம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகே வீரராகவபுரம் கிராமத்தில் தைப்பூசம் திருநாளை  முன்னிட்டு வீரராகவபுரம் கிராமம் மற்றும் இளைஞர்கள் சார்பாக ஆண்டுதோறும் கைப்புறா மாட்டுப் பந்தயம் நடத்தப்படுவது வழக்கம்.அதுபோல இந்த ஆண்டு  நடைபெற்ற கைப்புற மாட்டு பந்தயத்தில்  பெரியமாடு,நடுமாடு,கரிசான் மாடு, பூஞ்சிட்டு,தேன் சிட்டு என ஐந்து பிரிவாக   நடைபெற்ற பந்தையத்தில் 50 க்கும்  மாடுகளும் சாரதிகளும்  போட்டியில் பங்கேற்றன. வீரராகவபுரம் கிராமத்திலிருந்து போகவர 5 கிலோமீட்டர் தூரம் பந்தைய எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பந்தையத்தில் கலந்து கொண்ட மாடுகள் ஒன்றையொன்று  சீறிப்பாய்ந்து முந்திச் சென்றன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு  ரொக்கப்பணம் மற்றும் பரிசுக்கோப்பைகளும்  வழங்கப்பட்டது.

மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் கோப்பைகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.

பந்தைய நிகழ்ச்சியை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் ரசிகர்கள் கண்டு ரசித்ததனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

No comments:

Post a Comment