தேனிமாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் கண்மாயில் 2022-ல் மீனவத் தொழிலாளர்கள் ஏலம் எடுத்து 50 லட்சம் செலவில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு பாதுகாத்து வந்ததாகவும், பராமரித்து வளர்த்த மீன்களை மாற்றும் நபர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த போவதாக கூறிபோராட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஏஐடியுசிமீனவ தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னத்தம்பி,மாநிலத்தலைவர் முருகானந்தம்,மாவட்ட பொதுச் செயலாளர் ரவி முருகன்,மாநிலச் செயலாளர் செல்வம்,ராஜ்குமார்,ஞானவேல்,சென்றாயபெருமாள், கர்ணன், ராதாகிருஷ்ணன், பெரிய கருப்பன், உள்ளிட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment