நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியை அடுத்த வடக்குபொய்கைநல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பரவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த விபத்தில் உயிரிழந்த ராணி என்பவர் சடலத்தை ஆற்றைக் கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்தனர் மேலும் இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்யவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே நிரந்தரமாக பாலம் அமைத்து சுடுகாடு கூரை அமைத்து தர வேண்டுமென அது கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கோரிக்கையை அரசு செவிசாய்க்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment