தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,(TNTJ)ன் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முஹம்மது மீரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் நமது புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் வங்கி ஊழியர்கள், பேருந்து நடத்துனர்கள் மற்றும் வியாபாரிகளால் செல்லாது என்று கூறி பொதுமக்களிடமிருந்து வாங்க மறுக்கப்படுகின்றது.
ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பத்து ரூபாய் நாணயத்தை இவர்கள் செல்லாது என்று கூறி வாங்க மறுப்பது, இந்திய தண்டனைச் சட்டம்(IPC) பிரிவு 188 மற்றும் 124Aன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் 3 வருட சிறை தண்டனை வரை வழங்க வழிவகை செய்துள்ளது.
10 ரூபாய் நாணயம் செல்லாது என்று வாங்க மறுக்கப்படுவதால் ஏழைகளும், தினக்கூலிகளும் தங்களிடமுள்ள 10 ரூபாய் நாணயத்தை என்ன செய்வது என்று தெறியாமல் தினந்தோறும் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள்.
எனவே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 10 ரூபாய் நாணயம் விசயத்தில் நமது மாவட்டத்திற்கு ஒரு வழிகாட்டும் நெறி முறையை உருவாக்கி, வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுநலன் கருதி கேட்டுக் கொள்கிறேன். என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment