எருமலை நாயக்கன்பட்டியில் தையல் பயற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி - MAKKAL NERAM

Breaking

Friday, March 17, 2023

எருமலை நாயக்கன்பட்டியில் தையல் பயற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

 


 தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலக வளாகத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆர்.டி.யு. சார்பில் ,இலவச 6 மாத தொழில்திறன் பயிற்சிகளான தையல் பயிற்சி மற்றும் எம்பிராய்டரி பயிற்சி பெற்ற மகளிர் 26 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த நிகழ்வில், எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார் .துணை தலைவர் சுசீலா முருகதாஸ், மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா , ஊராட்சிசெயலர் பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர்களாக ஆர்.டி.யு. இயக்குனர் அந்தோணி பால்சாமி, தாட்கோ துணை மேலாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மகளிருக்கான திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில், தையல் பயிற்சி ஆசிரியைகள் உமா, பிரியா, ஈஸ்வரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பாண்டியராஜ் சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment