தீர்வைத் தொகை ரத்து செய்ய வேண்டும்... தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு... - MAKKAL NERAM

Breaking

Friday, March 17, 2023

தீர்வைத் தொகை ரத்து செய்ய வேண்டும்... தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு...


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயம் செய்யாத காலத்திற்கு தீர்வை தொகையை ரத்து செய்யுமாறு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், சிறுமுகை பேரூராட்சி, இரும்பறை, இலுப்பநத்தம், பள்ளேபாளையம் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மனு வழங்கினர்.

மனுவில் கூறியிருப்பதாவது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நீர் தேக்க பகுதிகளில் தீர்வை செலுத்தி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் முழு கொள்ளளவுடன் நீர் தேங்கி இருக்கிறது. எனவே நீர் தேங்கி இருக்கும் காலங்களில் எங்களால் விவசாயம் செய்ய முடிவதில்லை. ஆகவே விவசாயம் செய்யாத காலத்திற்கும் அரசு அதிகாரிகள் தீர்வை தொகை கட்டும்படி நிர்பந்திக்கின்றனர். ஆகவே பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அந்த காலத்திற்கு மட்டும் தீர்வைத் தொகையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment