ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் , ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆறாம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் மாற்றுத் திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பள்ளிக்கு நோட்டு புத்தகங்களை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். சரவணகுமார் வழங்கினார். இதில் மாவட்ட கழக துணை செயலாளர் தங்க வேலு , மாவட்ட எம் .ஜி. ஆர் மன்ற செயலாளர் எம். ராஜா மாதவன் , மூத்த கழக முன்னோடி இருதய சாமி, சத்தியமங்கலம் நகர கழக செயலாளர் என்.மூர்த்தி , அரியப்பம்பாளையம் பேரூராட்சி செயலாளர் ஜி. ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Saturday, March 18, 2023
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆறாம் ஆண்டு துவக்கவிழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment