திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் திருவாரூர் ரயில் சந்திப்பில் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Saturday, March 18, 2023

திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் திருவாரூர் ரயில் சந்திப்பில் ஆய்வு


திருவாரூர் ரயில் சந்திப்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் சந்திப்பு அல்லது நிலையங்களை  தொலைநோக்குப் பார்வையில் மேம்படுத்துதல் ஆகும்.  குறிப்பாக பயணிகளுக்கு உண்டான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டிடங்கள் கட்டுவது ஆகும். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில் தலா 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு மார்ச் 2024 க்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி கோட்டத்தில் திருவாரூர்  ரயில்சந்திப்பும்  ஒன்று.  தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட   கூடுதல் மேலாளர் திரு. எஸ். டி. இராமலிங்கம், முதுநிலை வணிக மேலாளர் திரு. செந்தில்குமார், கோட்ட பொறியாளர் (ஒருங்கிணைப்பு) திரு. இராஜராஜன் கோட்ட பொறியாளர் (கிழக்கு) இரவிக்குமார்  உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை திருவாரூரில் சந்திப்பின் பல பகுதிகளையும் மேம்படுத்துதலுக்காக  ஆய்வு நடத்தினர். அவர்களை திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் முனைவர் பாஸ்கரன் வரவேற்று பயணிகளுக்கு தேவையான கோரிக்கைகளை விளக்கி கூறினார். அதிகாரிகள் கூறும் போது திருவாரூர் ரயில் சந்திப்பில் மேம்படுத்துதல் பணிகள் அடுத்தடுத்து கட்டங்களில் சிறப்பாக செயல்படுத்த உள்ளது. அதே நேரத்தில் பயணிகள் ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பாகவும் சுகாதாரமான முறையிலும் கையாள வேண்டும் என்றனர். தவிர ரயில்வே  சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பயணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். ஆய்வின்போது நிலைய மேலாளர் திரு.குமரன், வணிக ஆய்வாளர் திரு. உதய சுகுமாரன், போக்குவரத்து ஆய்வாளர் திரு. சத்தியன், C&W பொறியாளர் திரு. செல்வகுமார், பணிகள் ஆய்வாளர் திரு. அன்புச்செல்வம் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதற்கட்டமாக முதலாம் நடை மேடையில் குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை(paid service), முதல் தளத்தில்  கூடுதலாக பயணிகள் ஓய்வறைகள், சந்திப்பின் இடப்புறம் உள்ள சிதிலமடைந்த குட்செட்டை அப்புறப்படுத்தல், ரயில் சந்திப்பின் முகப்பில் டிஜிட்டல் பெயர் பலகையுடன் ஆர்ச் அமைக்கப்படுதல், இருசக்கர வாகன காப்பகத்திற்கு கூடுதல் இடம் அளிக்கப்பட்டு சரி செய்யப்படுதல், UV சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் அமைத்தல்,  தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரம் உடனடியாக அமைத்தல், இரண்டாம் நடை மேடையில் கூடுதலாக மேற்கூரைகளும் பயணிகள் இருக்கைகளும் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment