திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதி நீர் நிலைகளில் வளர்ந்துள்ள வெங்காய தாமரை செடிகளை அகற்றும் பணியை துவக்கி வைத்து நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசும்போது, மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கின்ற நீராதாரங்களை பாதுகாத்து அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
தற்போது ஆறு, வாய்க்கால், குளம், குட்டைகளில் வெங்காய தாமரை செடிகள் வளர்ந்து நீர்நிலைகளை பாழ்படுத்தி வருகிறது. இச்செடியினால் தண்ணீர் போக்கு தடைப்படுகிறது, மீன் வளங்கள் அழிந்து வருகிறது, கொசுக்கள் உற்பத்தியாகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே இச்செடியை முற்றிலும் மனித உழைப்பினால் அகற்றிடும் பணி துவங்கியுள்ளது. அகற்றிய செடிகளை நகராட்சி நுண்ணுர தயாரிப்பு மையம் மூலம் பாலம் சேவை நிறுவனத்தின் மேற்பார்வையில் இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும் இச்செடிகளின் வளர்ச்சியை கண்காணித்து மூன்று மாத காலத்திற்குள் முற்றிலுமாக அழிக்கப்படும், இதனால் நீர்நிலைகள் தூய்மைபடும், இப்பணியை நகர்புற வேலைவாய்ப்பு திட்டபணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment