விளாத்திகுளம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ‌மீது ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்குதல் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 21, 2023

விளாத்திகுளம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ‌மீது ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்குதல்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  கீழநம்பிபுரத்தில்  அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில்  குருவம்மாள்(56) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரத் (40) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும்   2ம்வகுப்பு படிக்கும் பிரதிஷ் என்ற மாணவர் ஒருவரை ஆசிரியர் பாரத் தாக்கியதால் கூறி அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள்  புகுந்து ஆசிரியர் பாரத் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியரை ஓட , ஓட‌ விரட்டி செருப்பால் தாக்கி அடித்துள்ளனர். மேலும் இதை தடுக்க வந்த தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் எட்டயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment