கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை அகலப்படுத்த கோரி சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் - MAKKAL NERAM

Breaking

Friday, March 17, 2023

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை அகலப்படுத்த கோரி சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மந்திதோப்பு சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெருக்கடியும், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வரும் சூழ்நிலை உள்ளது. எனவே மந்திதோப்பு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தேவர் படிப்பகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி தாலூகா செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏரளமான கட்சி நிர்வாகிகள், அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டு சங்கு ஊதி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment