விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட மதுபோதை, மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து நடை பயண விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் 1 "போதையில் ஆடாதே போக்கற்று போகாதே", "போதையை ஒழிப்போம்" வாழ்வின் வளத்தை காப்போம்" ஓட்டாதே ஒட்டாதே மது அருந்தி வாகனம் ஓட்டாதே, என்றும் தூக்கிப்போடு தூக்கிப்போடு மது பாட்டிலை தூக்கி போடு, என்றும் குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
மேலும் இப்பேரணியில் கலந்துகொண்ட கல்லூரி, மாணவ , மாணவிகள் சிலம்பம் சுற்றியும், காளி வேடம், விநாயகர், எமதர்மராஜா,பாரதியார், மருத்துவர், உள்ளிட்ட பல்வேறுவேஷங்கள் அணிந்தும்,கரகம் ஆடியும் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களுக்கு விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியாக சென்றனர்.
இப்பேரணியில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் துவங்கி, மாரியம்மன் கோவில், மெயின்பஜார், தெப்பம், நகராட்சி அலுவலகம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக சென்று பாத்திமா நகர் சந்திப்பில் முடிவடைந்தது.
No comments:
Post a Comment