ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அனுமதி வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்கனவே தமிழக அரசு 10 மாவட்டங்களில் காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினருக்கு அனுமதி என அறிவித்த நிலையில் இதுவரை வனத்துறையினர் ஒரு காட்டுப் பன்றியை கூட சுட்டுக் கொல்லவில்லை எனவும், காட்டு பன்றிகளால் ஏற்கனவே விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு உடனடியாக வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து காட்டு பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல துப்பாக்கி வழங்கி அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர். மேலும் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, விவசாய சங்க நிர்வாகிகள் வேலுமணி, மோகன்ராஜ், அப்புசாமி, என்.வேலுமணி, பட்டரமங்கலம் நடராஜ், பனையம்பள்ளி நாகராஜ், செல்வராஜ், ராஜேந்திரன், சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Tuesday, March 21, 2023
Home
ஈரோடு மாவட்டம்
காட்டு பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அரசு அனுமதி அளிக்க வேண்டும்,என கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
காட்டு பன்றிகளை விவசாயிகளே சுட்டுக் கொல்ல அரசு அனுமதி அளிக்க வேண்டும்,என கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment