நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் பிரேம் கல்லூரியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் நேருயுவ கேந்திரா சார்பில் மாவட்ட அளவில் ஆன இளையோர் கலைவிழா மற்றும் திருவிழா நடைபெற்றது. நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாணவ மாணவியர்களின் கலைத்திறன் மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களை மேம்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி பேச்சுப்போட்டி கவிதை போட்டி, ஓவியப்போட்டி, கிராமியபாடல்கள் கேட்ப நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கல்லூரி மாணவ-மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்த விளக்க அரங்குகள் அமைக்க்பபட்டு இருந்தன. மழைநீரை சேமிப்போம் என்ற விழிப்புணர்பு விளம்பர போஸ்டர்கள் நேருயுவகேந்திரா சார்பில் வெளியிடப்பட்டது.
விழாவில் நேருயுவ கேந்திராவின் கூடுதல் இயக்குனர் நீலகண்டன் மீன்வளத்துறை கல்லூரிதனியார் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாணவர் மாணவிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment