கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழிவறை,குடிநீர் வசதிகளை மேம்படுத்தி தர கோரி - மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 21, 2023

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கழிவறை,குடிநீர் வசதிகளை மேம்படுத்தி தர கோரி - மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மோட்டர் பழுது காரணமாக கடந்த ஒரு வார காலமாக கழிவறை யை பயன்படுத்த தண்ணீர் வர வில்லை எனவும்  முறையாக குடிநீர் வசதியையும்  ஏற்படுத்தி தராதால்  கடைகளில் பாட்டில் குடிநீர் வாங்கி பருகுவதாகவும் , காலை மாலை கல்லூரிக்கு  பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரியும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகதத்தின் முன்பு ஆர்பாட்டம்  நடத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நடத்திய மாணவ மாணவிகளிடம் கல்லூரி முதல்வர் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதையடுத்து  மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து வகுப்பறைக்கு சென்றனர்.

No comments:

Post a Comment