விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா எணப்படும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து 13 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு வீதி உலா நடைபெறும்.
12ம் திருநாளான பங்குனி அமாவாசையான இன்று கோவில் முன்புறம் வளர்க்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள், எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டு பூ வளர்க்கப்படும். கடந்த 12 நாட்கள் விரதம் இருந்து பூ ( தீ) க்குழி இறக்குவார்கள்.
முன்னதாக இன்று காலை திருக்கோவிலுக்கு வந்து காப்பு கட்டி கொண்ட பக்தர்கள் தொடர்ந்து மஞ்சள் ஆடை அணிந்து 4 ரத விதிகளை சுற்றி வந்தனர். விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் பிற்பகலில் பூ (தீ) க்குழி இறக்க அனுமதிக்கபட்டனர் , முன்னதாக இன்று பூ (தீ)க்குழி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன.கடந்த ஆண்டுகளை விட ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20000 க்கும் மேற்பட்டோர் பூ( தீ) க்குழி இறங்கினர்.இன்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment