டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் காணொளி காட்சி வாயிலாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 16, 2023

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் காணொளி காட்சி வாயிலாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி


ரோஸ்கர் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுவரை, பிரதமர் மோடி 2.9 லட்சம் நபர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கியுள்ளார்.

ரோஸ்கர் மேளா திட்டம் நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 71,000 பணி நியமன ஆணைகளை காணொளி வழியாக புதிய பணியாளர்களுக்கு வழங்க உள்ளார் என கூறப்பட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், காணொளி காட்சி வாயிலாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி. ரோஸ்கர் மேளா திட்டத்தின் மூலம் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 71,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு கிட்டத்தட்ட 71,000 பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில், அரசாங்கம் சுமார் ரூ ரூ.34 லட்சம் கோடியை மூலதனச் செலவினங்களுக்காகச் செலவிட்டுள்ளது.

இன்று புதிய பணி நியமன ஆணை பெற்றவர்கள், கிராமின் டாக் சேவக், கமர்ஷியல்-கம்-டிக்கெட் கிளார்க் மற்றும் ஜூனியர் கிளார்க்-கம்-டைப்பிஸ்ட் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள் என்றார்.

மேலும், தற்போது ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பித்தால் ஊழல் நடைபெற்ற வாய்ப்பு இல்லை என்றும் குரூப் சி, டி பிரிவுகளின் உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment