ஈரோடு மாவட்டம், சத்தியமங் கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சி, சிவியார்பாளையத் தில் தனி நபர் குடும்ப பட்டா நிலத்துடன் இணைந்த அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தால், அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கு வழிதடப் பிரச்சனை ஏற்படுவதாகவும், அரசு நிலத்தைஆக்கிரமிப்பை அகற்றி, வீடற்ற ஏழை மக்களு க்கு வீட்டுமனைப்பட்டா வழங்க, நில அளவீடு செய்ய வலியுறுத்தி,பொதுமக்கள் சார்பாக கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் . எம் .சரவணன் தலைமையில்,சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில், தலைமையிடத்து, துணை வட்டாச்சியர் சாமுண் டீஸ்வரியிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுகொண்ட துணை வட்டாச்சியர் ,சம்பந்த ப்பட்ட அலுவலருக்கு மேல் நடவடிக்கை எடுக்க பரிந் து ரை செய்வதாக தெரிவித்தார் . மனு அளித்தபோது உடன் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ், ஊராட்சி உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சிவியார்பாளையம் பொதுமக்கள் இருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
No comments:
Post a Comment