கிராம நிர்வாக அலுவலர்களைக் கண்டித்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, May 16, 2023

கிராம நிர்வாக அலுவலர்களைக் கண்டித்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி இளையரனேசந்தால் ,இனாம் மணியாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பட்டா மாற்றம், நில அளவீடு, வாரிசு சான்று, உள்ளிட்ட சான்றிதழ் பெற வரும் பொது மக்களிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகவும் பணம் தர இயலாத ஏழை எளிய மக்களை அலைக்கழித்து மனுக்களை அலட்சியப்படுத்தி வருவதாகவும் கூறி அப்பகுதியைச்  சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் தலைவர் அன்புராஜ் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment