இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 5, 2023

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை


 கடந்த மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மண்டபம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கடந்த மாதம் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.


இந்த நிலையில், வழக்கை விசாரித்த இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் 22 தமிழக மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் 22 தமிழக மீனவர்களும் ஒருசில தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment