இதோ....! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 5, 2023

இதோ....! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

 


உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கவர்ச்சிமிக்க, மற்றும் ஜொலிக்கக்கூடிய பொருட்கள் என்றாளே மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த வரிசையில் வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் விரும்புவது தங்கம் தான்.


தங்கத்தை நகைகளாக அணிவது மட்டுமல்லாமல் அதில் முதலீடு செய்து தேவையான நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய தன்மை கொண்ட தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.


அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.43,680 க்கும், கிராமிற்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.5,460 க்கும் விற்பனை ஆகி வருகிறது.


நேற்று, சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.64 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வெள்ளி விலை மாற்றமில்லாமல் கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.75.80 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,800 க்கும் விற்பனையாகிறது.

No comments:

Post a Comment