மேஷம் ராசிபலன்
உங்கள் நாள், ஆற்றல் மற்றும் நோக்கத்தில் எழுச்சியை உண்டாகும். உங்கள் செயலில் ஒரு உந்துதல் இருப்பதைச் சொல்லத் தேவையில்லை, நீங்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் இது ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். செய்யும் செயல்களில் முழுமையாகக் கவனம் செலுத்துவது, உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கலாம். எனவே, மன அழுத்த மேலாண்மை என்பது உங்கள் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தோன்றும் விரக்தியை விலகி விட்டு, பயனுள்ள ஏதாவது ஒன்றைச் செய்ய முயலவும்.
ரிஷபம் ராசிபலன்
ஒருபோதும் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வருவதில்லை. நீங்களே அதை தேடிக்கண்டுபிடித்து, அதன் பின்னே செல்லுங்கள். உங்கள் வழியில் செல்லும் இந்த புதிய வாய்ப்பை, நீங்கள் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். உங்களைச் சுற்றிலுமுள்ள கவனச்சிதறல்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வாழ்க்கையின் கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவாக நின்ற நபர்களிடம் இணக்கமாக இருங்கள். சின்னஞ்சிறு விஷயங்களில் கூட, புலப்படும் அழகியல்களை ரசிக்க நேரம் ஒதுக்குங்கள். ஆகையால், உங்களுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை.
மிதுனம் ராசிபலன்
மனஅழுத்தமானது உங்களது உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள செரிமான பிரச்சினைகள் மோசமான உணவுப் பழக்கத்தினால் எற்பட்டதல்ல. மாறாக, உங்களது மன அழுத்ததினால் ஏற்பட்டதாகும். உங்களுக்கு ஒரு கடினமான நேரத்தை அளிக்க விரும்பும் ஒரு சில நபர்கள் உள்ளனர். நீங்கள் கோவப்படுவதாக உணரும் போது, சிறிது நேரத்திற்கு அந்த இடத்தை விட்டு அகன்று, உங்கள் சொந்த நலனுக்காக வேறு ஏதாவது ஒன்றை நினைத்துப் பாருங்கள். நிறைய விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன. உங்களது வாழ்க்கையிலிருந்து எதிர்மறை விஷயைங்களை புறந்தள்ளுங்கள். நல்ல விஷயங்கள் உங்கள் வழியில் வந்து கொண்டிருகின்றன.
கடகம் ராசிபலன்
இன்று, உங்களது அன்பிற்குரியவர்களும், அன்பான நண்பர்களும் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டப் போகிறார்கள். அவர்கள் உங்களது பிரச்சினைகளிலிருந்து எதிர்பாராதவிதமான மகிழ்ச்சியைக் அளிக்கப் போகிறார்கள். இன்று, சமூக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வெளியே செல்லும் சூழல்கள் ஏற்படக்கூடும். மேலும், இது ஓர் நல்ல உறவுப்பிணைப்பை உருவாக்க உதவும். கடந்த சிலநாட்களாக, உங்களது மனஅழுத்தம் நிறைந்த வேலை தொடர்பான எல்லா விஷயங்களிலிருந்து இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாக நிகழும். இன்று, உங்களைப் நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் எவ்வித வருத்தமும் பட வேண்டாம். சில நேரங்களில், இது உங்களுக்கு தேவைப்படுகிறது. இதை இன்று முயற்சி செய்யுங்கள்!
சிம்மம் ராசிபலன்
இன்று உங்களுக்கு நாள் முழுவதும் நீலமாகவே இருந்ததா? இடைவிடாது வேலை செய்வது உங்களை இப்படி உணரச் செய்து விடும். படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு, இன்று கலைஞர்களைத் தடுப்பதைப் போல மந்தமாக உணரலாம். இந்த நேரத்தில் அது தேவையானது என்பதுடன், கொஞ்சம் உற்சாகமாக இருக்க உதவும். செய்யும் செயல்களை உற்சாகமாக செய்யுங்கள் அல்லது அது உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொருத்து அமையும். அது உங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியை உண்டாக்கலாம்.
கன்னி ராசிபலன்
பொறுப்பை கண்டு பயந்து ஓடுவது சிறந்ததாக இருக்காது. நீங்கள் மேலும் முன்னேற உங்களுக்கு உண்டாகும் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். இன்று நீங்கள் அன்பைத் தேடுகிறீர்கள். இந்த நாளில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் எச்சரிக்கையாக இருங்கள். அதற்கான நேரமும், சக்தியும் உங்களிடம் உள்ளதா? ஆபத்தான ஒப்பந்தத்தில் பங்கேற்பது குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதில் பங்கேற்க விருப்பமில்லை என்பதை வெண்ணெய்யைக் கத்தியால் வெட்டுவது போன்று உறுதியாகச் சொல்ல வேண்டும். நீங்கள் மறுப்பது யாரையும் காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
துலாம் ராசிபலன்
உங்கள் மனதில் சில விஷயங்கள் உள்ளன. உங்கள் மனதில் உள்ளதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். கவனம் செலுத்துவது நல்லது என்றாலும், உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ முழுமையாக கட்டுக்குள் வைத்திராமல் இழப்பது நல்லாலோசனை ஆகாது. இந்த நாள், உங்களுக்கு சமநிலையினைக் கொண்டதாக இருக்கும். உங்களது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் நீங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் உடலைப் புறக்கணித்து வருகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் உடல்நலத்தை பாதிக்கிறது.
விருச்சிகம் ராசிபலன்
எல்லாவற்றையும் சரிசெய்ய முயற்சிக்காதீர்கள். உங்களால் எளிதில் தீர்க்க முடியாத சில விஷயங்கள் வாழ்க்கையில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்று, ஆரோக்கியம் என்பது உங்களது முக்கியமான கருதுகோளாக இருக்கிறது. சரியாகச் சொல்லப் போனால், அது சில காலமாகவே இருந்தது. ஆனாலும், நீங்கள் அதற்கு போதுமான கவனம் செலுத்த ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. இந்த பிரச்சினையினை உங்களது உடலின் ஒரு தவிர்க்க முடியாத வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
தனுசு ராசிபலன்
சமீபத்தில், அனைத்துவிதமான மன அழுத்தங்களும், பதட்டமும் சேர்ந்து உங்கள் உடல்நலத்தை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் ஒவ்வாமை அல்லது நாட்பட்ட நோயினை எதிர்த்துப் போராடுபவராக இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய முடிவுசெய்ய இது சரியான தருணமாகும். நேர்மறையானவற்றை சொல்வதற்கு இயலாத நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். உங்களைச் சுற்றிலுமுள்ள நபர்கள் உங்களது மனதிற்கு எதிர்மறையானவற்றையே அளித்துள்ளனர். இன்று, ஆகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, உங்கள் உள்ளுணர்வுகளை முன்பை விட தற்போது அதிகம் நம்ப வேண்டும்.
மகரம் ராசிபலன்
புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத்தும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம், உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சி செய்யுங்கள். இது அந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உதவும். உங்களுக்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த வழியில் உங்களுக்கே உள்ள ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். புதிய நட்புகள் மற்றும் நண்பர்களை உருவாக்குங்கள். சில விஷயங்களைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை நீங்கள் அறிந்து கொள்ள, அவர்கள் உங்களுக்கு உதவ முடியும்.
கும்பம் ராசிபலன்
இன்று, பொய்யான ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு குழப்பத்தில் ஆழ்ந்து விடாதீர்கள், நண்பர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், உங்களை ஏமாற்றலாம், ஆகையால் கவனமாக இருங்கள். சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே, அவற்றை ஆப்லைனில் வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வெடுங்கள். கூடுதலாக, நம்பிக்கையான விஷயங்களில், குறிப்பிட்ட நபர்களைத் தேடாமல் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர்களிடம் ரகசியங்களைச் சொன்னால் பாதுகாப்பாக இருக்குமா என்பதைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நம்பிக்கை இன்மை ஏற்பட்டால், உங்கள் ரகசியங்களை உங்கள் ஆழ்மனதில் பூட்டி வைத்துக் கொள்ளுங்கள், அந்த ரகசியங்களைத் தவறானவர்களிடம் சொல்லி விட வேண்டாம்.
மீனம் ராசிபலன்
நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்க விரைந்து எடுப்பதைத் தவிருங்கள். நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு, உங்களுக்கு முக்கியம் என்று கருத்தும் விஷயங்களைப் பற்றிப் படியுங்கள். உங்கள் வழியில் நிறைய நல்ல விஷயங்கள் வர உள்ளது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் புத்திசாலித்தனமும், உண்மைத் தன்மையும் நிச்சயமாக உங்களுக்குப் பெரிய நண்பர்கள் வட்டத்தைப் பெற்றுக் கொடுக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். ஓய்வெடுக்க நேரம் எடுத்து உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment