கொமராபாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Monday, August 28, 2023

கொமராபாளையம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட,             குமரன்கரடு, கொமாரபாளையம்  ஆகிய இரண்டு பகுதிகளில்  தலா ரூபாய் 14 இலட்சம் மதிப்பில்  ஊராட்சிநிதி மற்றும் MGNREGA  திட்டத்திலிருந்து  புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும்,  கோபி சட்டமன்ற உறுப்பினர்   கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு  அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை  ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி  தலைமை தாங்கினார். கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன்  முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.கே.காளியப்பன், சத்தியபாமா, சத்தியமங்கலம் அஇஅதிமுக தெற்கு ஒன்றிய கழக  செயலாளர்   என்.என்.சிவராஜ் , பவானிசாகர் அஇஅதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஏ.பழனிசாமி , கோபி ஒன்றிய குழு தலைவர் மவுலீஸ்வரன், சத்தி அஇஅதிமுக நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், மாவட்ட வார்த்தக அணி செயலாளர் எஸ்.ஆர்.வெங்கிடுசாமி ,  அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் தேவமுத்து, சிக்கரசம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.இளங்கோ, ஒன்றிய குழு உறுப்பினர்  சத்யா பழனிச்சாமி,துணைத் தலைவர் ரமேஷ்,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் சுப்பிரமணியம், வடிவேலு, சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, குருநாதாள்,ரத்னா, கதிரி, வளர்ச்சிகுழு உறுப்பினர் ராசு, ஊர் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழு பொறுப்பாளர்கள், அஇஅதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471

No comments:

Post a Comment