மாக்கினாங்கோம்பை ஊராட்சியில் அரசூர் வாரச்சந்தை மேம்பாட்டுக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சார்பாக மேடைகள் அமைக்க பூமி பூஜை
ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாக்கினாங் கோம்பை ஊராட்சிஅரசூர் வாரச்சந்தை மேம்பாட்டுக்காக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் சார்பாக ரூ.48லட்சம் மதிப்பில் மேடைகள் அமைக்க சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும். சத்தி தெற்கு ஒன்றிய தி.மு.க. ஒன்றிய செயலாளர். கே.சி.பி. இளங்கோ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.பிரேம்குமார் (கி.ஊ.) வட்டார வளர்ச்சி அலுவலர் அ.அப்துல்வகாப் , மாக்கினாங் கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு ஈஸ்வரன் , இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். எம். செந்தில் , துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜம்மாள், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விஸ்வநாதன், கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் (எ) பா.செந்தில் நாதன், ஒன்றிய துணைச் செயலாளர் டிபி. அசோகன், கிளைக் கழகச் செயலாளர்கள், மூர்த்தி, தங்கச்சாமி, திலீப் குமார், திம்ம நாயக்கர், சரவணன் எ. எஸ். சண்முகம், சாமிநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக தொண்டர்கள், ஊர் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments