மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் புதியதாக 17 ரோந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்களை மாவட்ட எஸ்பி மீனா துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் ரோந்து அலுவலர்கள் மாவட்ட காவல் துறை சார்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோரின் நலன் கருதி கூடுதலாக 17 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி மீனா கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அவசர அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனைகள் கண்டறியப்பட்டு எளிதில் தீர்வு காண்பதற்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியூர் பயணம் மேற்கொள்வோர் காவல் நிலையத்தில் தங்களது விவரங்களை தெரிவிப்பதன் மூலம் அப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இந்த ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படும் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்..
No comments