ஏவிசி கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற கருத்தரங்கு - MAKKAL NERAM

Breaking

Sunday, September 17, 2023

ஏவிசி கல்லூரியில் வணிகவியல் துறை மன்ற கருத்தரங்கு


மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி கல்லூரி வணிகவியல் துறையின் வணிகவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு தொழில் நோக்கங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கல்லூரியின் துணை முதல்வரும் வணிகவியல் துறை தலைவருமான டாக்டர் எம். மதிவாணன் தலைமை வகித்தார். புலமுதன்மையர் (டீன்)  டாக்டர் எஸ். மயில்வாகனன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும் பெங்களூர் விப்ரோ டெக்னாலஜிஸ் ப்ராஜெக்ட் மேனேஜர்  கே. சரண்ராஜ் கலந்துகொண்டு வணிகவியல் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் அதனை பெறுவதற்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய தொழில்நுட்ப திறன், மொழிகள் சார்ந்த திறன்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு எளிய நடையில் எடுத்துக் கூறினார். இதில் வணிகவியல் துறை மற்றும் பிறத்துறை பேராசிரியர்கள், திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


படவிளக்கம்:-

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடந்த வணிகவியல் மன்ற கருத்தரங்கில் கல்லூரியின் முன்னாள் மாணவரும் பெங்களூர் விப்ரோ டெக்னாலஜிஸ் ப்ராஜெக்ட் மேனேஜர்  கே. சரண்ராஜ் கலந்துகொண்டு பேசினார். அருகில் துணை முதல்வரும் வணிகவியல் துறை தலைவருமான டாக்டர் எம். மதிவாணன் தலைமை வகித்தார் புலமுதன்மையர் (டீன்)  டாக்டர் எஸ். மயில்வாகனன்.

No comments:

Post a Comment