இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, October 28, 2023

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தின 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம் சட்டமன்ற அறிவிப்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பௌர்ணமி தினம் தோறும் கோவில்களை பூஜை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.


 மாதம் தோறும் விளக்கு பூஜை நடைபெற்ற வருகிறது. ஐப்பசி மாதம் பௌர்ணமி தினமான இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் உள்ள பெண்கள் அம்மனுக்கு விளக்கு ஏற்று பூஜையில் கலந்து கொண்டு அம்மன் துதி பாடி பக்தியுடன் பூஜை செய்தனர். 108 விளக்கு பூஜையில் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் பரம்பரை அரங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment