திருவைகல் மகா மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மன் ஆலய 16ஆம் ஆண்டு பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Saturday, October 14, 2023

திருவைகல் மகா மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மன் ஆலய 16ஆம் ஆண்டு பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திருவைகல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மன் ஆலயம் 16 ஆம் ஆண்டு பால்குட திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இன்று திருவைகல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலிலிருந்து வானவேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் பால்குடங்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

இதில் பக்தர் ஒருவர் ஆனிபாதம் அணிந்து நடந்து வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது பின்னர் மகா மாரியம்மன் மற்றும் நாகாத்தம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டாமை காரர்கள் மற்றும் கிராமவாசிகள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment