பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு - MAKKAL NERAM

Breaking

Saturday, October 14, 2023

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு

 


தேவர் குருபூஜைக்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில்  மரியாதை செலுத்த வருபவர்கள் அங்கு மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது என  நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


கமுதி அருகே பசும்பொன்னில் ஆண்டு தோறும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை அரசு விழாவாக நடக்கிறது. இந்த நிகழ்வுக்கு வருபவர்கள் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் மாலைகள் செலுத்தியும் வணங்கி செல்வர். ஆனால், தேவர் ஒரு ஆன்மிகத் தலைவர் என்பதால் அவரது நினைவாலயத்துக்கு வரும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கக்கூடாது என நினைவாலயப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.


இதுதொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனிடம் காந்திமீனாள் நடராஜன் சார்பில் தேவர் நினைவிட  நிர்வாகிகள் பழனி, அழகுராஜா, ராமமூர்த்தி ஆகியோர் மனு அளித்தனர்.



அந்த மனுவில், தேவர் ஒரு ஆன்மிக தலைவர். அவரது குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடும் தருணத்தில் பசும்பொன்னுக்கு வருவோர், அவரது நினைவாலயத்தில் மலர் வளையம் வைக்க அனுமதிக்கக் கூடாது. மலர் மாலை மட்டும் அணிவித்து வணங்க அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அவரின் இக்கோரிக்கையை தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியர்  விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment