கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விழிப்புணர்வு மாரத்தான். போட்டிகள் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் .தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வாரம் அக்டோபர் 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வருவாய்த்துறை சார்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கரூர் அரசு கலைக் கல்லூரி வளாகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வாணிப கழகம் சார்பில் நடைபயணமும்,மண்டல மேலாளர் தலைமையில்.தொடங்கி அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் அலுவலகம் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கரூர் மாவட்ட செய்தியாளர்
மோகன்ராஜ்
93857-82554
No comments:
Post a Comment